உள்ளூராட்சி தொடர்பான புதிய வர்த்தமானிக்கு எதிரான மனுவை விசாரணை தொடர்பில் இன்று தீர்மானம்!

Wednesday, November 22nd, 2017

உள்ளுராட்சி தேர்தல் தொடர்பான புதிய வர்த்தமானிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதா? இல்லையா? என்பது தொடர்பில் இன்று அறிவிக்கப்படவுள்ளது.

உள்ளுராட்சி எல்லை மற்றும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை உள்ளடங்கியதாக உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சினால் இந்த வர்த்தமானி வெளியாக்கப்பட்டிருந்தது.

கொழும்பு, கண்டி, மாத்தறை, எம்பிலிப்பிட்டிய, ஹாலிஎலி ஆகிய உள்ளுராச்சி மன்றங்களை பிரதிநிதித்துவப்படுத்துவம் 6 பேர் குறித்த வர்த்தமானிக்கு எதிரான மனுவைத் தாக்கல் செய்தனர். குறித்த மனுவில் பிரதிவாதிகளாக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் பைசர் முஸ்தபா மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

இந்த மனுவை, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழு முன்னிலையில் கடந்த 16ஆம் திகதி ஆராயப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பிலான தீர்மானம் இன்று அறிவிக்கப்படவுள்ளது.

Related posts:

குடாநாட்டில் படையினரின் பாவனையில் இருந்த மேலும் ஒரு தொகுதி பொது மக்களுக்கு சொந்தமான நிலப்பரப்பு
பங்காளி கட்சிகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகள் விரைவில் தீர்க்கப்படும் - பிரதமர் மஹிந்த...
ஜனவரிமுதல் இதுவரை 400 ஆயிரம் கடவுச்சீட்டுக்கள் விநியோகம் - 17.5 சதவீதமானோரே வெளிநாடு சென்றுள்ளனர் எ...