உள்ளூராட்சி தேர்தல்: 11 முதல் 14 வரை வேட்பு மனு ஏற்பு!

Tuesday, November 21st, 2017

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுவை அடுத்த மாதம் 11 ஆம் திகதி முதல் ஏற்பதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதன்படி, அடுத்த மாதம் 11 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை வேட்பு மனு ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த திகதி அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் 27 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

Related posts: