உள்ளூராட்சி தேர்தல்: மே மாதத்தில் நடக்கலாம் என்கிறார் மஹிந்த தேசப்பிரிய!

Sunday, January 15th, 2017

எதிர்வரும் மே மாதத்துக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்தலாம் என்று தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

எல்லை நிர்ணயக்குழுவின் அறிக்கை எதிர்வரும் 17ஆம் திகதி உள்ளூராட்சி மன்ற மற்றும் மாகாண சபைகள் அமைச்சரிடம் கையளிக்கப்படவுள்ளது. எதிர்வரும் 20 ஆம் திகதி அது வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டால், மே மாதத்துக்கு முன்னர் தேர்தலை நடத்தலாம் என்று தேசப்பிரிய கூறியுள்ளார்.

மேலும், இந்தத் தேர்தலை எதிர்வரும் சித்திரை புத்தாண்டின் பின்னரே நடத்தலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

makintha-thesa

Related posts: