உள்ளூராட்சி தேர்தல் முறைமையில் மாற்றங்களை ஏற்படுத்த நடவடிக்கை – தேர்தல் முறைமையை மீளாய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழுவால் பரிந்துரைகள் முன்வைப்பு!

உள்ளூராட்சி அமைப்புகளில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையாக குறைக்க வேண்டும் என தேர்தல் முறைமையை மீளாய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழு பரிந்துரைத்துள்ளது.
அத்துடன், குறித்த குழுவினால் உள்ளூராட்சி தேர்தல் முறைமையில் மாற்றங்களை ஏற்படுவதற்கான மேலும் சில பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்றத் தேர்வுக் குழுவிற்கு குறித்த யோசனைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், அதில் 12 பரிந்துரைகள் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எந்தவொரு கட்சியோ அல்லது சுயேட்சைக் குழுவோ உள்ளூராட்சி அமைப்பில் பிரதிநிதித்துவத்தைப் பெற, அந்த குழு 25% அல்லது அதற்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், பெண்களின் பிரதிநிதித்துவத்தை ஊக்குவிக்கும் திட்டங்களும் இதில் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
ஐ.தே.கட்சியின் உறுப்பினரானார் சரத் பொன்சேகா!
தமிழர் அரசியல் உரிமைப்போராட்டத்தை சரியான வழியில் நகர்த்தியவர் டக்ளஸ் தேவானந்தா - ஈ.பி.டி.பியின் ஜேர்...
24, 25 ஆம் திகதிகள் அரச விடுமுறை நாட்களாக அறிவிப்பு!
|
|