உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான யோசனை விரைவில் நாடாளுமன்றத்தில் – அமைச்சர் பைசர் முஸ்தபா!

Monday, April 3rd, 2017

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவது தொடர்பான யோசனை எதிர்வரும் வாரத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

சட்டமா அதிபரின் பரிந்துரையுடன் இந்த பணி முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் கூறியுள்ளார். உள்ளூராட்சி சபை மீள் நிர்ணயம் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் கடந்த பெப்ரவரி 17ம் திகதியன்று வெளியிடப்பட்டது.

எனினும் தேர்தலை நடத்துவது தொடர்பில் இன்னும் தாமதம் நீடிக்கிறது. இந்த நிலையில் அமைச்சர் பைசர் முஸ்தபா மேற்கண்ட அறிவிப்பை விடுத்துள்ளார்.

இதேவேளை, தமிழ் – சிங்கள புதுவருடத்தின் பின்னர் கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்த நடவடிக்கை எடுப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: