உள்ளூராட்சி தேர்தலில் வெற்றிகண்டு மக்களுக்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றுவோம் – வேட்பானளர்கள் மத்தியில் ஈ.பி.டி.பியின் தேசிய அமைப்பாளர்!

நடைபெறவுள்ள உள்ளுராச்சி தேர்தலை எதிக்கொள்ள நாம் தாயாராகவுள்ளோம். இதற்காக எமது அனைத்து வேட்பாளர்களும் தங்களது தொகுதிகளில் அர்பணிப்புடன் கடமையாற்ற தயார் ஆக வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சிவரத்தினம் தெரிவித்துள்ளர்.
கிளிநொச்சி பூநகரி பிரதேச வேட்பாளர்கள் வேட்புமனு பத்திரத்தில் கைச்சாத்திடும் நிகழ்வு கட்சியின் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றது வேட்புமனு பத்திரத்தில் கைசாத்திட்ட பின்பு வேட்பாளர்கள் மத்தியில் உரையாற்றும் பொழுது தேசியாமைப்பாளர் இதனை தெருவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் –
கடந்த காலங்களிலும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி அபிவிருத்தியை நோக்காக கொண்டு பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து உள்ளதை மக்கள் அறிந்தே வைத்துள்ளார்கள் இதன் காரணமாக மக்களுக்கும் கட்சிக்குமான தொடர்புகளும் உறவுகளும் இப்பொழுது அதிகரித்தே காணப்படுகிறது.
எனவே மக்களுடன் நல்ல உறவைப்பேணி கட்சின் வெற்றிக்கு உழைக்க வேண்டும் எனவும் தேசிய அமைப்பாளர் மேலும் தெரிவித்தார் நிகழ்வில் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளரும் மாகாணசபை உறுப்பினருமான வை தவநாதன் உட்பட பலரும் கலந்து கொண்டிருத்தனர்
Related posts:
|
|