உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பில் கருத்துக்கூற சட்டமா அதிபர் திணைக்களம் மறுப்பு!

Wednesday, November 9th, 2016

61 உள்ளுராட்சி சபைகளுக்கு தேர்தல் நடத்துவது தொடர்பில் கருத்து கூறமுடியாது என சட்டமா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளது.

பிரதேச எல்லை நிர்ணயப் பிரச்சினை இல்லாத 61 உள்ளுராட்சி சபைகளுக்கு தேர்தல் நடத்துவதற்கான சட்ட இயலுமை குறித்து, சட்டமா அதிபரிடம் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய விளக்கம் கோரி இருந்தார். எனினும் இது தொடர்பில் தற்போது உயர் நீதிமன்றத்தில் பல வழக்குகள் உள்ளன.எனவே நீதிமன்றத்துக்கு மதிப்பளித்து, இது குறித்து தற்போதைக்கு கருத்து கூற முடியாது என்று சட்டமா அதிபர் தெரிவித்துள்ளதாக தேர்தல்கள் ஆணையகம் கூறியுள்ளது.

Screen-Shot-2015-10-06-at-1.31.52-PM

Related posts: