உள்ளூராட்சி சபைகளின் பொறுப்புகள் இன்று முதல் உள்ளூராட்சி ஆணையாளர்களிடம்!

பதவிக்காலம் நிறைவடைந்த 23 உள்ளூராட்சி மன்றங்களின் பொறுப்புகள் இன்றுமுதல் உள்ளூராட்சி ஆணையாளர்களிடம் ஒப்படைக்கப்படும் என உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் மீண்டும் நடத்தப்படும்வரை அவற்றின் அதிகாரங்கள் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் என அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி தெரிவித்துள்ளார்.
நேற்று நள்ளிரவு முதல் பதவிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில், உள்ளூராட்சி மன்றங்களின் காலத்தை மீண்டும் நீடிக்காமல் இருப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதை அடுத்து, அந்த உள்ளூராட்சி மன்றங்களின் பொறுப்புகளை அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
35 வயதுக்கு குறைந்தவர்கள் முச்சக்கர வண்டி செலுத்த தடை!
ஆகஸ்ட் மாதம் உள்ளூராட்சி மன்ற திருத்த சட்டமூலம் சமர்ப்பிப்பு!
சுற்றுலாத்துறைசார் நிறுவனங்களுக்கான சலுகைகளை எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையில் நீடிக்க அமைச்சரவை அனு...
|
|