உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கு 15,000 ரூபா கொடுப்பனவு!

உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தெரிவாகிய உறுப்பினர்களுக்கு ஏனைய சலுகைகளை வழங்காது மாதாந்தக் கொடுப்பனவாக 15 ஆயிரம் ரூபாவை மாத்திரம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்@ராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்பிரகாரம் மோட்டார் சைக்கிள், தொலைபேசிக் கொடுப்பனவு, பக்ஸ் இயந்திரங்கள் போன்றவை வழங்கப்பட மாட்டாது என மாகாண சபைகள் மற்றும் உள்@ராட்சி அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி தெரிவித்துள்ளார்.
எனினும் உள்@ராட்சி சபை உறுப்பினர்களுக்கு தொலைபேசி உள்ளிட்ட ஏனைய கொடுப்பனவுகள் தேவை என்றால், உள்@ராட்சி நிர்வாகத்தை சரியாக முன்னெடுத்து வரி வருமானத்தின் ஊடாக இவ்வாறான சலுகைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
இம்முறை உள்@ராட்சி சபைகளுக்காக 8 ஆயிரத்து 700 உறுப்பினர்களுக்கு மேல் தெரிவாகியுள்ளதால் இவர்களுக்காக 12 கோடி ரூபா ஒதுக்கீடு செய்ய நேரிடுமென்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
உள்ளூராட்சி சபை அமர்வுகளை நடத்துவதில் சிரமங்களை எதிர்நோக்கினால் சபைகளுக்குச் சொந்தமான மண்டபங்கள் அல்லது நிதி இயலுமைக்கு பொருத்தமான வகையில் மாற்று இடங்களில் அமர்வுகளை தற்போதைக்கு நடத்த முடியும் என்றும் அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|