உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பில் அமைச்சரவை பத்திரம் தாக்கல்!

Tuesday, April 25th, 2017

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவது தொடர்பிலான விசேட அமைச்சரவை பத்திரத்தை அமைச்சரவையில் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதை  மாகாண மற்றும் உள்ளூராட்சி மன்ற விவகார அமைச்சர் பைசர் முஸ்தபா அமைச்சரவை பத்திரத்தை தாக்கல் செய்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பில் குறித்த அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் அது பற்றிய தீர்மானங்கள் எட்டப்படும்.  அதனைத் தொடர்ந்து தேர்தல்கள் எவ்வாறு நடத்தப்படும் என விரிவாக ஆராயப்படவுள்ளதாக தேசிய கலந்துரையாடல்கள் தொடர்பான அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

Related posts: