உள்ளூராட்சிமன்றங்களை அமைப்பதற்கான பணிகள் ஆரம்பம்!

Tuesday, March 20th, 2018

உள்ளூராட்சிமன்ற நிறுவனங்களை அமைக்கும் பணி இன்று ஆரம்பமாகின்றன என மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்ற ஆணையாளருக்கு உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களை அமைப்பதற்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டிருப்பதாகவும் இதேவேளை ஏதேனும் ஒரு கட்சிக்குபெரும்பான்மையை பெற்றுக்கொள்ள முடியாத உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை நிலைநிறுத்தும் முறை குறித்தும் அமைச்சின் செயலாளர் கமல்பத்மஸ்ரீ தெரிவித்துள்ளார்.

கடந்த பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. 24 மாவட்டங்களுக்காக தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களின் பெயர்ப்பட்டியல் வர்த்தமானியில் வெளியிடுவதற்கான பணிகள் இடம்பெற்று வருகின்றன. இம்முறை உள்ளூராட்சி மன்ற தேர்தல்மூலம் மன்றங்களை பிரதிநிதித்துவப்படுத்தி பெண்களும் தெரிவாகியுள்ளனர்.

Related posts: