உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் இரவு 9 மணிக்கு வெளிவரும் – சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு!

Thursday, February 8th, 2018

நாடு தழுவிய ரீதியில் எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள உள்@ராட்சி மன்றததேர்தல்  முடிவுகளை அன்றைய தினம் இரவு 9 மணிக்கு வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்தள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் சுயாதீனத் தேர்தலுக்காண பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன  எஞ்சியுள்ள பணிகளையும் இன்னும் சில தினங்களில் நிறைவு செய்வதற்கு எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் சனிக்கிழமை காலை ஏழு மணிக்கு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பமாகி மாலை 4 மணிக்கு நிறைவுள்ள் அதேவேளை நான்கு முப்பதுக்கு வாக்கெண்னும் பணிகள் ஆரம்பமாகவுள்ளன.

இம்முறை தொகுதி மட்டத்தில் வாக்கெண்ணும் பணி நடைபெறவுள்ளதால் இரவு 8.30 மணிக்குள் வாக்கெண்ணும் நடவடிக்கைகளைப் பூர்த்தி செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அன்றிரவு ஒன்பது மணியளவில் தேர்தல் முடிவுகளை வெளியிடுதற்கு தாம் எதிர்பார்த்துள்ளதாகவும் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts: