உள்ளூராட்சித் தேர்தல் தாமதமானால் நீதிமன்றம் செல்வோம் – பெவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி அறிவிப்பு!

Thursday, November 24th, 2022

உள்ளூராட்சித் தேர்தல் குறித்த திகதிக்குள் அறிவிக்கப்படாவிட்டால், உச்ச நீதிமன்றத்திற்குச் சென்று சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பெவ்ரல் (PAFFREL) தெரிவித்துள்ளது.

இன்று காலை தொலைக்காட்சி அலைவரிசையில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே Paffrel அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் உரிய காலத்தில் தேர்தலை நடத்துவதற்கு அழைப்பு விடுக்கப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான ஆவணங்களை பெவ்ரலை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகள் தயாரித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: