உள்ளூராட்சித் தேர்தல் அரசாங்கத்தை கவிழ்த்து ஜனாதிபதியை மாற்றக்கூடியதொனறதல்ல – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டு!

உள்ளூராட்சித் தேர்தல் அரசாங்கத்தை கவிழ்த்து ஜனாதிபதியை மாற்றக்கூடிய தேர்தல் அல்ல என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இதேநேரம் ஒரு நாட்டையே தீயிட்டு கொளுத்தும், மக்களைக் கொல்வது போன்ற வன்முறை மனப்பான்மை கொண்ட ஜே.வி.பி.க்கு அதிகாரம் வழங்குவது மிகவும் ஆபத்தானது எனவும் அவர் கூறியுள்ளார்..
கம்பஹாவில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆலோசனை வழங்கி நாட்டை அராஜகமாக்கியவர்கள் இன்று வேறு கட்சிகளில் இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
2022ஆம் ஆண்டு உலக உதைபந்தாட்டப்போட்டி கட்டாரில்!
மரக்கறியின் கேள்வி அதிகரிப்பு!
கொரியாவில் தங்கியுள்ள இலங்கையர்களை அழைத்துவர நடவடிக்கை - தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெ...
|
|