உள்ளூராட்சிகளின் எல்லை நிர்ணய மேன்முறையீட்டு விசாரணையின் கால எல்லை மேலும் நீடிப்பு!

Thursday, October 20th, 2016

உள்ளுராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணய நடைமுறை சார்ந்த மேன்முறையீடுகளை விசாரிக்கும் கால எல்லையை டிசம்பர் 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக உள்ளுராட்சி மன்ற மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் எல்லை நிர்ணய மேன்முறையீட்டுக் குழுவின் கோரிக்கையை ஏற்று கால எல்லையை நீடித்ததாக தெரிவித்த அவர்  டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் தனது அறிக்கை சமர்ப்பிக்குமாறு குழுவிற்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

எல்லை நிர்ணய மேன்முறையீட்டுக் குழுவின் அறிக்கை முழுமையானதாக இருப்பதை உறுதி செய்வது அரசாங்கத்தின் நோக்கமாகும். அறிக்கiயின் நகலை சகல அரசியல் கட்சிகளுக்கும் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

faysar


இலங்கையுடன் ஜெர்மன் மூன்று உடன்படிக்கைகளில் கைச்சாத்து!
வித்தியா கொலை வழக்கின் சந்தேகநபர்களது விளக்கமறியல் நீடிப்பு!
பாதீட்டின் இரண்டாவது வாசிப்பு நிறைவேறியது!
லொத்தர் சபைகளை வெளிவிவகார அமைச்சுக்கு இணைப்பது தொடர்வில் சிக்கல் – பந்துல
தன்னிறைவை நோக்கிய விவசாய உற்பத்திகள் மேம்படுத்தப்படல் வேண்டும் - ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாணசபை உறுப...