உள்ளுர் பசும் பாலுக்கான விலையை அதிகரிக்க வேண்டும் – பெருந்தோட்ட பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை!

Thursday, June 9th, 2022

பசும்பால் 1 லீற்றருக்கு நூறு ரூபா விலை தமக்கு கட்டுப்படியாவதில்லை எனவே பாலுக்கான விலையை அதிகரிக்க வேண்டும் என்றும் பெருந்தோட்ட பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

இறக்குமதி செய்யப்படும் 1 கிலோ பால்மாவின் விலை 2,800 ரூபாவாக அதிகரித்துள்ளது எனினும் உள்ளுர் பால் உற்பத்தியாளர்களுக்கு நூறு ரூபாவை வழங்குவது நியாயமற்றது என சுட்டிக்காட்டும் இவர்கள், பசு மாடுகளுக்கான தீவனம் விலை 120 ரூபா என்றும் ஒரு மாட்டுக்கு தினமொன்றுக்கு 4 கிலோ புண்ணாக்கு தேவை எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் தினமும் இரண்டு கட்டு புல் அவசியம். மருத்துவச் செலவு, வேலையாட்களுக்கு கூலி என பல செலவுகள் உள்ளன.

இந்த நூறுரூபாய் வருமானத்தை விட பசுவுக்கு அதிக செலவாவதால் மாடு வளர்ப்பு வருமானம் தராத தொழிலாக மாறி வருகிறது’ என்று பால் உற்பத்தியாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

கண்டி மாவட்டத்தில் பல பெருந்தோட்டங்கள் மூடப்பட்டுள்ளதையடுத்து இங்கு வசிப்போர் பயிர்ச் செய்கையிலும் பால் உற்பத்தியிலுமே ஈடுபட்டுள்ளனர். குளவிக் கொட்டு, பாம்புக்கடி, கடும் மழை போன்ற அபாயங்களுக்கு மத்தியிலேயே மாடு வளர்ப்பில் ஈடுபட்டிருப்பதாக கண்டி மாவட்ட பெருந்தோட்ட பால் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: