உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் விலகல் தெரிவத்தாட்சி அலுவலருக்கு அறிவிக்க வேண்டும்!

நகரசபை அல்லது பிரதேச சபைகள் என்பனவற்றில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் விலக விருப்பின் நேரடியாக தெரிவத்தாட்சி அலுவலருக்கே விலகல் கோரிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணைக்குழுத் தேர்தல் ஆணையாளர் நாயகம் எம்.ரத்நாயக்க தெரிவித்தார்.
உள்ளுராட்சி சபைகள் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு விடுத்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் அச்சபையின் 3 மாதகாலப்பகுதிக்கு சபை கூட்டங்களில் கலந்து கொள்ளத் தவறினால் அவரது உறுப்புரிமை வெறிதாகும். இங்கு மூன்று மாதங்கள் எனக்கருதப்படுவது நாட்காட்டிகளின் மூன்று மாதங்களின்றி 90 நாட்களாகும். உள்ளுர் அதிகார சபைகள் தேர்தல் கட்டளைச் சட்டத்திற்கு அமைய இறப்பெய்தியமை சுயவிருப்பின் விலகுதல் அல்லது வேறு ஏதேனும் காரணத்தினால் நகரசபை, பிரதேசசபை தொடர்பில் தவிசாளர் அல்லது உறுப்பினர் வெற்றிடம் ஏற்பட முடியும்.
இதனைவிட குறிப்பிட்ட எண்ணிக்கைக்குரிய சபை கூட்டங்களில் கலந்து கொள்ளாமை, உறுப்பினர் பதவியில் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொள்ளாமை.
மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டமை, கட்சியின் அங்கத்துவம் இல்லாதொழித்தமை, பதவியில் இருந்து அகற்றப்பட்டமை போன்ற காரணங்களால் உறுப்பினர் பதவி இல்லாதொழிக்கப்படும். இவ்வாறு வெற்றிடம் ஏற்படும் சந்தர்ப்பத்தில் தெரிவத்தாட்சி அலுவலருக்கு அறிவித்தல் வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
|
|