உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்காக யாழ்ப்பாணத்தில் 521 வாக்களிப்பு நிலையங்கள்!

யாழ் மாவட்டத்தின் 17 உள்ளுராட்ச சபைத் தேர்தலுக்காக 521 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.
வலி.வடக்கு பிரதேச சபை எல்லைப்பரப்பில் 65 வாக்களிப்பு நிலையங்களும்,யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைப்பரப்பிற்குள் 52 வாக்களிப்பு நிலையங்களும், வலி.கிழக்கு பிரதேச சபையின் எல்லைப் பரப்பினுள் 49, வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட எல்லைப்பரப்பிற்குள் 47 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.
இதேபோன்று வல்வெட்டித்துறை நகரசபையில் 12,பருத்தித்துறை நகர சபை 10, சாவகச்சேரி நகரசபை 11, காரைநகர் பிரதேச சபை 14, ஊர்காவற்றுறை பிரதேச சபையில் 16 வாக்களிப்பு நிலையங்களும் அமையவுள்ளன.
மேலும் நெடுந்திவு பிரதேச சபையில்8, வேலனை பிரதேச சபைக்காக27, வலி மேற்கு பிரதேச சபையில் 36,வலி.தென்மேற்கு பிரதேச சபையில் 36 வலி. தெற்கு பிரதேச சபையில் 35, சாவகச்சேரி பிரதேச சபையில் 41, பருத்தித்துறை பிரதேச சபை எல்லைப்பரப்பிற்குள் 33, நல்லூர் பிரதேச சபையில் 29, வாக்களிப்பு நிலையங்கள் என மொத்தம் 521 வாக்களிப்பு நிலையங்கன் அமைக்கப்படவுள்ளதாக தேர்தல் திணைக்களத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
|
|