உள்ளுராட்சி சபைகளின் செயற்பாடுகளை வட்டார உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்!

Tuesday, September 25th, 2018

உள்ளுராட்சி சபைகளால் நடைபெறும் செயற்பாடுகள் தொடர்பில் வட்டார உறுப்பினர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் அப்போது தான் செயற்பாடுகள் தொடர்பில் கண்காணிப்புகளை மேற்கொள்ள முடியும்.

வடக்கு மாகாணத்தில் 34 உள்ளுராட்சி சபைகள் உள்ளன. அவற்றின் மாதாந்த அமர்வுகள் நடைபெற்று வருகின்றன. வட்டார ரீதியாக வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது  தொடர்பில் மாதாந்த அமர்வில் கலந்துரையாடப்படும். குறிப்பாக தற்போது வீதிகளைச் சீரமைத்தல் மற்றும் தெரு மின் விளக்குப் பொருத்தல் போன்ற நடவடிக்கைகள் அதிகளவில் நடைபெற்று வருகின்றது.

வீதி சீரமைப்பதாயின் குறித்த வீதியை தொழில்நுட்ப அலுவலர் பார்வையிட்டு எவ்வளவு மண், தார், கல் வேண்டும், எவ்வளவு நிதி தேவைப்படும் போன்ற விடயங்களைச் சபைக்கு தவிசாளர் ஊடாக சமர்ப்பிப்பர். அதன் பின்னர் சபையின் தொழில் நுட்பக் குழு ஊடாக முடிவுகள் எடுக்கப்பட்டு வேலைகள் நடைபெறும். இவ்வாறு வேலைகள் ஆரம்பிக்கப்படும்போது வேலை நடைபெறும் குறித்த வட்டாரத்துக்கான உறுப்பினருக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

அப்போதுதான் சரியான அளவில் பொருள்கள் போடப்பட்டு வேலைகள் நடைபெறுகின்றதா என்பது தொடர்பில் நேரில் சென்று பார்க்க முடியும். இவ்வாறு வட்டார ரீதியாக வேலைகள் நடைபெறும்போது உறுப்பினர்களுக்குப் பல சந்தர்ப்பங்களில் தெரியப்படுத்தவில்லை என்பது தொடர்பில் சபை அமர்வுகளில் வாதங்கள் இடம்பெறுகின்றன. ஆகவே இது தொடர்பில் தவிசாளர் மற்றும் உப குழுக்கள் வட்டார ரீதியில் வேலைகள் நடைபெறும்போது உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

Related posts: