உள்ளுராட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை அரைவாசியாகும் – சட்டத்தில் திருத்தம் வரும் என்கிறார் ஜனாதிபதி!

Saturday, April 7th, 2018

உள்ளுராட்சி மன்றங்களுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கையானது ஒரு போதும் நாட்டுக்கு நல்லதல்ல.

உள்ளுராட்சி மன்றச் சட்டத்தை திருத்துவதன் மூலம் தற்போது தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைந்த பின்னர் அடுத்த தேர்தலில் இந்த எண்ணிக்கையை 50 வீதமாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பத்திரிகை ஆசிரியர்கள், உரிமையாளர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே  இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது

உள்ளுராட்சி சபைகளில் மக்களின் வாக்குகளினால் வெற்றி பெற்ற அரசியல் கட்சியைத் தோல்வியடையச் செய்து எதிர்க் கட்சிகள் அதிகாரத்தைப் பிடிக்கின்றன. இது தேர்தல் முறையிலுள்ள குறைபாடு. இதன் காரணமாக மக்கள் விருப்பம், முடிவு செல்வாக்கு இழந்துள்ளது.

இதனால் உள்ளுராட்சித் தேர்தல் சட்டத்தைத் திருத்துவது அவசியம். அதன் மூலம் பெரும்பான்மை மக்கள் விரும்பிய அரசியல் கட்சிகள் உள்ளுராட்சி சபைகளில் ஆட்சி செய்யும் வாய்ப்பு ஏற்படுத்தப்படும்.

Related posts: