உள்ளுராட்சிசபை சாரதிகளுக்கு வாகன பராமரிப்பு தொடர்பான பயிற்சிநெறி!

Sunday, June 3rd, 2018

யாழ் மாவட்டத்தில் 16   உள்ளுராட்சி சபைகளில் கடமையாற்றும் சாரதிகளுக்கு அவதானமான சாரதீயம் மற்றும் வாகனப்பராமரிப்பு தொடர்பில் விசேட பயிற்சி வழங்கப்படவுள்ளதாக உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் திருமதி விஜயலட்சுமி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இப்பயிற்சி நெறி ஒவ்வொரு உள்ளுராட்சி சபையிலும் நான்கு மணித்தியாலங்கள் நடத்தப்படவுள்ளது. இப் பயிற்சிநெறியில் கலந்துகொண்டவர்களுக்கு கைநூலும் சான்றிதழும் வழங்கப்படவுள்ளது.

இப் பயிற்சிநெறி எதிர்வரும் 5 ஆம் திகதி ஆரம்பமாகி எதிர்வரும் ஆகஸ்ட் வரை இடம்பெறவுள்ளது. எதிர்வரும் 5 ஆம் திகதி வல்வெட்டித்துறை, பருத்தித்துறை நகரசபைகளுக்கும் எதிர்வரும் 12 ஆம் திகதி சாவகச்சேரி நகர சபை மற்றும் சாவகச்சேரி பிரதேச சபைக்கும் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் 19 ஆம் திகதி வேலணை மற்றும் ஊர்காவற்றுறை பிரதேச சபைகளுக்கும் எதிர்வரும் 26 ஆம் திகதி வலி. மேற்கு மற்றும் வலி. தென்மேற்கு பிரதேச சபைகளுக்கும் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் ஜீலை 3 ஆம் திகதி வலி. வடக்கு மற்றும் வலி. தெற்கு பிரதேச சபைகளுக்கும் எதிர்வரும் ஜீலை 10 ஆம் திகதி வலி. கிழக்கு மற்றும் நல்லூர் பிரதேசசபைக்கும் பயிற்சிநெறி இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் ஜீலை 17 ஆம் திகதி பருத்தித்துறை மற்றும் வடமராட்சி, தென்மேற்கு பிரதேசசபைகளுக்கும் எதிர்வரும் ஜீலை 24 ஆம் திகதி காரைநகர் பிரதேசசபை சாரதிகளுக்கும் உள்ளுராட்சி ஆணையாளர் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இறுதியாக எதிர்வரும் ஆகஸ்ட் 7 ஆம் திகதி நெடுந்தீவு பிரதேச சபையில் காலை 8.30 மணி முதல் 12.30 மணி வரை இடம்பெறவுள்ளது.

Related posts:


தலையில் இரும்புக் கம்பியால் பலமாக குத்தப்பட்டு ஆபத்தான நிலையில் இளைஞர் ஒருவர் யாழ். போதனாவில் அனுமதி...
கிராம அலுவலரின் சான்றிதழ்களுக்கு பிரதேச செயலரின் ஒப்பம் அவசியமற்றது - பெப்ரவரி 10 முதல் நடைமுறை!
அதிகாரப் பகிர்வு குறித்து கவனத்திற்கொள்ளப்படும் - அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்..பீரிஸ் தெரிவிப்பு!