உள்ளாட்சித் தேர்தல் முறையின் குறைபாடுகளை தீர்க்க நடவடிக்கை – அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவிப்பு!

Wednesday, November 25th, 2020

மாகாண சபை தேர்தல்களை விரைவாக நடத்துவது தொடர்பாக பிரதமரிடம் ஆலோசனை பெறப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர குழுவில் தெரிவித்தார்.

அத்துடன் விகிதாசார பிரதிநிதித்துவம் அல்லது கலப்பு விகிதாசார பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் தேர்தல் நடத்தப்படுமா என்பது குறித்து பிரதமரிடம் ஆலோசனை பெறப்பட்டுள்ளது.

எல்லை நிர்ணய செயற்பாடுகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தின் கீழ் இதற்காகத் தனியான ஆணைக்குழுவொன்று அமைக்கப்படும் என்றும் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

பிரதேச அடிப்படையில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு உறுப்பினர்களை நியமிப்பது குறித்தும் இக்குழு விவாதித்ததுடன் புதிய தேர்தல் முறையும் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்ற கருத்தும் இங்கு முன்வைக்கப்பட்டது.

பிரதேச சபை உறுப்பினர்கள் முறையற்ற வகையில் நடத்தப்படுகின்றமை இன்று ஒரு பிரச்சினையாகிவிட்டது. உள்ளாட்சித் தேர்தல் முறையின் குறைபாடுகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்தார்.

உள்ளூராட்சி அமைப்புகளுக்குள் நுழைய அரசு அதிகாரிகளுக்கு வாய்ப்பு அளிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related posts: