உள்நாட்டு – வெளிநாட்டு மதுபானங்களின் தரம் தொடர்பில் பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை !

நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மதுபானங்களின் தரம் தொடர்பில் பரிசோதனைகளை மேற்கொள்ள மதுவரித் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மதுபானங்களின் தரத்தை உரிய வகையில் பேணுமாறு கோபா குழு வழங்கிய அறிவுறுத்தலுக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.
நாடு முழுவதும் முதல் தடவையாக இவ்வாறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, நாடளாவிய ரீதியாக உள்ள மதுபானசாலைகள், தொழிற்சாலைகள் மற்றும் விநியோக நிலையங்களில் மதுபானங்களின் மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
உரிய தரத்தை மீறும் மதுபானசாலைகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என மதுவரி ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
விரைவில் தேசிய மீன்பிடித்துறை சட்டமூலம் அமைச்சரவைக்கு!
இன்று நடைபெறுவது அடுத்த தேர்தலின் நாற்காலிப் போட்டிகளே - ஈ.பி.டி.பியின் ஈ.பிடி.பி முக்கியஸ்தர் விந்த...
மினுவங்கொடை , பேலியகொட கொத்தணிகளில் 8 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி - இராணுவத் த...
|
|