உள்நாட்டு கைத்தொழிலாளர்களுக்கு, ஒரு வாரத்திற்குள் நிவாரணத் தீர்வு – அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவிப்பு!

தமது உற்பத்திகளுக்குத் தேவையான மூலப்பொருட்களைப் பெற்றுக்கொள்வதில் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள உள்நாட்டு கைத்தொழிலாளர்களுக்கு, ஒரு வார காலத்திற்குள் நிவாரணத் தீர்வு வழங்கப்படும் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கலந்துரையாடல் நேற்று இடம்பெற்றது. இதன்போது கொரோனா தொற்றுக் காரணமாக சில பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பொருட்களை உள்நாட்டில் உற்பத்தி செய்ய முடியாததால் தடை அகற்றப்பட வேண்டிய பொருட்களை இனங்காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த அமைச்சர் கைத்தொழில் அமைச்சு, சுங்கப் பிரிவு, இலங்கை முதலீட்டுச் சபை, இலங்கை கைத்தொழில் நிறுவகம் என்பவற்றை உள்ளடக்கிய குழுவொன்றின் மூலம் இந்தப் பட்டியல் தயாரிக்கப்படுவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!
கொரோனா: பிரித்தானியாவில் 24 மணித்தியாலத்தில் 938 மரணங்கள் பதிவு!
முடக்க நிலையிலிருந்து எதிர்வரும் 11 ஆம் திகதி திறக்கப்படுகிறது இலங்கை - சுகாதார வசதிகளை உரியமுறையில...
|
|