உள்நாட்டு அறுவடைகளுக்கு அதிக விலையை வழங்க அரசாங்கம் நடவடிக்கை – ஜனாதிபதி தெரிவிப்பு!

இறக்குமதி வர்த்தக முறைமைக்கு பதிலாக உள்நாட்டு உற்பத்திகளுக்கு முக்கியத்துவமளிக்கும் பொருளாதார செயற்பாடுகளுக்கு அரசாங்கம் வழி ஏற்படுத்தி உள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அத்துடன் விவசாயம் மற்றும் உற்பத்திகளில் ஈடுபட்டு, அதன்மூலம் அதிகபட்ச பயனை பெற்றுக் கொள்ள வேண்டும். நவீன தொழிநுட்பத்தின் மூலம் விவசாய பொருளாதாரம் பலப்படுத்தப்பட வேண்டும். அதற்காக விவசாயப் பயிர்களை இறக்குமதி செய்வதை நிறுத்தி, உள்நாட்டு அறுவடைகளுக்கு அதிக விலையை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் தெரிவித்துள்ளர்.
இதேவேளை, பட்டதாரிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறுவோருக்கு ஒரு இலட்சத்து 50 தொழில்களை வழங்கும் நடவடிக்கை தேர்தலின் பின்னர் இடம்பெறும் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாட்டில் பிராணவாயு பற்றாக்குறையை நிவர்த்திக்க சுகாதார அமைச்சு யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம்!
யாழ்.மாவட்டத்திலும் தொற்றாளர் எண்ணிக்கை 5 ஆயிரத்தைக் கடந்தது - மாவட்ட செயலகம் தகவல்!
ஜனவரி முதலாம் திகதிமுதல் கட்டாய நடைமுறை - விரைவில் வர்த்தமானி வெளியிடப்படும் என இராஜாங்க அமைச்சர் தி...
|
|