உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொறிமுறையுடன் தமிழ் மக்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் அரசு அக்கறையாக உள்ளது – அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Monday, May 13th, 2024

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரச்சினைகள் உள்ளன. அத்துடன் காணாமல் போனோர்கள் தொடர்பில் அவர்களின் உறவினர்கள் நீதி கோரி போராடுகின்றனர். அதற்கான பொறிமுறையொன்றை உருவாக்குவதில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. ஆனால் அந்த பொறிமுறையை உருவாக்குவதற்கான பொறுப்பினை சர்வதேசத்துக்கு வழங்க முடியாது என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், உள்ளக பொறிமுறையின் மூலம் ஒருபோதும் தீர்வு கிடைக்காது என்றும், ரோம் சட்டத்திற்கமைய அரசாங்கம் செயற்பட வேண்டும் என்றும் அண்மையில் நாடாளுமன்றில் வலியுறுத்தி இருந்தார்.

அத்துடன் எதிர்வரும் 19ஆம் திகதியுடன் யுத்தம் நிறைவுபெற்று 15 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. இவ்வாறானதொரு நிலையில் பொறுப்பு கூறல் விடயத்தில் அரசாங்கத்தின் கடப்பாடு தொடர்ந்தும் விமர்சனத்துக்குட்பட்டதாகவே காணப்படுகிறது.

இது தொடர்பில் தெளிவுபடுத்தும்போதே வெளிவிவகார அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்..

இது தொடர்பில் அவர் மேலும் தெளிவுபடுத்துகையில் –

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரச்சினைகள் உள்ளன. காணாமல் போனோர் அலுவலகத்தில் சென்று தமது உறவுகளை இழந்த மக்கள் அவர்களை தேடித்தருமாறு கோருகின்றனர். அதற்கான பொறிமுறையொன்றை உருவாக்குவது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளோம். ஆனால் அந்த பொறிமுறையை உருவாக்குவதற்கான பொறுப்பினை சர்வதேசத்துக்கு வழங்க முடியாது என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: