உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் தொடர்பில் விரைவில் புதிய சட்டம்!

Thursday, July 21st, 2016

உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் தொடர்பில் நடை­மு­றை­யி­லுள்ள சட்டம் மிகவும் பழை­மை­ வாய்ந்ததாகும். அதனை தற்­போ­தைய நவீன யுகத்­திற்குப் பொருத்­த­மாக மாற்­றி­ய­மைக்க வேண்டியுள்­ளது. எனவே அப்­ப­ணி­யினை மேற்கொள்­வ­தற்கு குழு­வொன்று அமைக்கப்பட்டுள்ளதாக உள்­ளூ­ராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்­தபா தெரி­வித்துள்ளார்.

பதுளை மாவட்­டத்­தி­லுள்ள உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் செய­லா­ளர்கள் மற்றும் ஆணையாளர்களுட­னான சந்­திப்பு ஊவா மாகாண சபையின் கேட்­போர்­ கூ­டத்தில் நடை­பெற்­றது. அதன்­போதே அவர் இதனைத் தெரி­வித்­துள்ளார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில் –

உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் பத­விக்­காலம் நிறை­வ­டைந்த பின்னர் அதன் செயற்­பாடு முடங்கிப்போயுள்­ள­தாக சிலர் குற்றஞ் சாட்­டு­கின்­றனர். எ­னினும் திற­மை­யான அர­சி­யல்­வா­திகள் இருப்­ப­துபோல் திற­மை­யான அதி­கா­ரி­களும் உள்­ளனர். ஆகவே அக்­குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு இடமளிக்­காது அது­ தொ­டர்பில் அதி­கா­ரிகள் உரிய நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்.

தற்­போது நீங்கள் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் தலை­வர்கள் மற்றும் நகரபிதாக்­களின் வகிபாகங்களில் உள்­ளீர்கள். ஆகவே நீங்கள் அர­சி­யல்­வா­திகள் இல்­லா­வி­டத்தும் அவர்­களைப் போல் மக்­க­ளுடன் நெருக்­க­மான உறவைப் பேணி சேவை செய்ய வேண்டும். மேலும் இவ்­வா­றான காலகட்­டத்தில் முடி­யு­மாயின் விடு­முறை நாட்­க­ளிலும் மக்­க­ளுக்கு சேவை செய்ய பின்நிற்கக்கூடாது.

பொது­வாக மக்கள் தங்­களின் கட்­டு­மானப்பணி­களை முன்­னெ­டுப்­ப­தற்கு உள்­ளூ­ராட்சி மன்றங்களிடம் அனு­மதி கேட்டு விண்­ணப்­பித்தால், அது ­தொ­டர்­பி­லான முடி­வினை 14 நாட்களுக்குள் வழங்க வேண்டும். அவ்­வாறு உரியமுறையில் சேவை­யினை வழங்­கி­னால்தான் உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் தொடர்கில் மக்­க­ளுக்கு நன்­ம­திப்பு ஏற்­படும்.

அத்­துடன் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் இடம்­பெறும் துஷ்­பி­ர­யோகம் மற்றும் விரயம் தொடர்பில் அவ­தானம் செலுத்தி, அதற்­கெ­தி­ராக நட­வ­டிக்கை எடுக்க வேண் டும். வரு­மான மார்க்­கத்தில் இடையூ­று கள் இருப்பின் சட்­டப்­படி அணுகி உரிய தீர்­வினைப் பெற்­றுக்­கொள்ள வேண்டும். மேலும் ஒவ்­வொரு மாதமும் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் வரு­மா­னத்தை அதி­க­ரிப்­ப­தற்­கான வேலைத்திட்டங்­களை முன்­னெ­டுக்க வேண்டும். சோலைவரி செலுத்­தா­தோரின் சொத்­து­க்களை கைய­கப்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்டும்.

ஏரா­ள­மானோர் பௌதீக அபி­வி­ருத்­தியே சிறந்த பலனைத் தரு­வ­தாகக் கரு­து­கின்­றனர். எனினும் மனி­த­வள அபி­வி­ருத்­தியின் மூலம் அதி­க­ள­வான பிர­யோ­ச­னங்­களை அடையமுடியும். ஆ­கவே எதிர்­கா­லத்தில் மனி­த­வள அபி­வி­ருத்தி தொடர்பில் உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் அதிக கரி­சனை காட்ட வேண்டும்.

அத்­துடன் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளி­னூ­டாக வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுப்­ப­தற்கு ஒப்பந்தக்காரர்­க­ளுக்கு ஒப்­பந்தம் வழங்­கும்­போது காலக்­கெடு தொடர்பில் உரிய அவ­தானம் செலுத்தவேண்டும். குறி த்த காலப்­ப­கு­தியில் வேலைத்­திட்­டங்­களை பூர்த்திசெய்­யாத ஒப்பந்தக்காரர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். மேலும் எந்­த­வொரு ஒப்பந்தத்தையும் அதன் இலாபம், நஷ்டம் தொடர்பில் அவ­தானம் செலுத்­தாது வழங்கக் கூடாது என தெரிவித்துள்ளார்.

Related posts: