உலக வங்கியின் நிதிப்பங்களிப்பில் யாழ் – பொன்னாலை வீதி புனரமைப்பு!

உலக வங்கியின் நிதிப்பங்களிப்பில் யாழ் – பொன்னாலை வீதியில் 12.8 கிலோ மீற்றர் நீளமான பகுதி விரைவில் பல மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் மீள்புனரமைப்பு செய்யப்படவுள்ளதாக தெரிக்கப்படுகின்றது.
அபிவிருத்தி மற்றும் மெகா பொலிஸ் அமைச்சு இதற்கான நடவடிக்கையயை யாழ்.நகர அபிவிருத்தியின் ஓர் அங்கமாக இதனை முன்னெடுத்துள்ளது. மேற்படி வீதியின் மீள்புனரமைப்பு குறித்த விளக்கம் யாழ்.அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தலைமையில் அண்மையில் இடம்பெற்றது. இதன் புனரமைப்பினை மேற்கொள்ளும் திட்டக் கழுத் தலைவர் பொறியியலாளர் ஆர்.எம்.அமரசேகர மீள்புனரமைப்பு செய்யப்படவுள்ள ஏபி – 21 வீதியின் வரைபட விளக்கத்தினை வழங்கியதுடன் 2017இல் இத்திட்டம் முழுமை பெறும் என்றார்.
Related posts:
பாலியல் ரீதியான நோய்களிலிருந்து மாணவ சமூகத்தை பாதுகாத்துக் கொள்ளவேண்டும் - எய்ட்ஸ் நோய் கட்டுப்பாட்...
மதுபோதையில் வாகனம் செலுத்துவோரைக் கைது செய்ய நடவடிக்கை -பொலிஸ் அத்தியட்சகர் இந்திக ஹபுகொட!
காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலைக்கு பிரதமர் விஜயம் - தொழிற்சாலையை புனரமைக்க நடவடிக்கை!
|
|