உலக மனநல ஆரோக்கிய தின இலச்சினை ஜனாதிபதிக்கு அணிவிப்பு!

Wednesday, October 11th, 2017

ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி இடம்பெறும் உலக மனநல ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு அதன் இலச்சினை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு அணிவிக்கப்பட்டது.

ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் இலங்கை மனநல ஆரோக்கிய சேவை செயற்பாட்டு வலையமைப்பின் பணிப்பாளர் சுனில் நாணயக்கார இவ்விலச்சினை ஜனாதிபதிக்கு அணிவித்தார்.

மனநல ஆரோக்கிய சேவையை வழங்குவதற்காக வீடு வீடாகச் சென்று நோயாளிகளை கவனிக்கும் பணியைப் பாராட்டி இலங்கை மனநல ஆரோக்கிய சேவையாளர்கள் செயற்பாட்டு வலையமைப்பின் உறுப்பினர்களான எஸ்.ஏ.மேரிநோனா மற்றும் டபிள்யு.ஏ.நிக்கொலஸ் ஆகியோருக்கு ஜனாதிபதியினால் விருதுகள் வழங்கப்பட்டன.

.

Related posts: