உலக புகையிலை எதிர்ப்பு தினம் இன்று !
Monday, May 31st, 2021உலக புகையிலை எதிர்ப்பு தினம் இன்றாகும். புகையிலையை புறந்தள்ளி வெற்றியாளர் ஆகுவோம் என்பதே இம்முறை குறித்த ததினத்தின் தொனிப்பொருள் ஆகும்.
தொற்றா நோய்களான இரத்த அழுத்தம், நுரையீரல் புற்றுநோய், இருதய நோய், நீரிழிவு நோய், சுவாச பிரச்சினை உள்ளிட்ட நோய்களுக்கு புகையிலைப் பாவனை கூடுதலாக தாக்கம் செலுத்துகின்றது.
பக்க விளைவுகளுக்கும் இது காரணமாக அமைகின்றது என உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது. புகைப்பிடித்தல் காரணமாக உலகம் முழுவதிலும் வருடாந்தம் 8 மில்லியன் பேர் உயிரிழக்கின்றனர். இலங்கையிலும் வருடாந்தம் சுமார் 20 ஆயிரம் பேர் புகை பிடித்தல் காரணமாக உயிரிழப்பதாக சுகாதார அமைச்சின் பொது சுகாதார சேவைகளுக்கான மேலதிக செயலாளர் விசேட வைத்தியர் திருமதி லக்சி சோமதுங்க தெரிவித்துள்ளார்.
புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு புகைபிடித்தல் மூலம் ஏற்படும் நிலைமைகளை கையடக்க தொலைபேசி ஊடாக விளங்கிக் கொள்வதற்கான செயலி ஒன்றை சுகாதார ஊக்குவிப்பு பணியகம் இன்று மாலை அறிமுகப்படுத்தி வைக்க உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை கொரோனா தோற்று நிலைமையில் நாட்டில் புகை புகைப்பிடித்தலுக்கு அடிமையானவர்கள் இல் 48 சதவீதமாணவர்கள் புகைப்பிடித்தலை நிறுத்த இருப்பதாக மதுசார மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது. இது ஒரு நல்ல முன்னேற்றம் ஆகும் என அந்த நிலையம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|