உலக நாணய நிதியத்துடன் இணக்கம் கொள்ளும்  இலங்கை!

Sunday, March 26th, 2017

சர்வதேச நாணய நிதியத்துடன் எதிர்வரும் ஏப்ரல் மாதம் தொடக்கம் இணக்கப்பாட்டுடன் செயற்பட  தீர்மானித்துள்ளதாக இலங்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய சில விடயங்கள் தொடர்பாக அதிகாரிகள் மட்டத்தில் இணக்கப்பாடு காண்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், இலங்கையில் நிதி முகாமைத்துவம் தொடர்பான சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், புதிய வருமான வரிகள் சிலவற்றை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை, நிதியமைச்சு மற்றும் வேறு அமைச்சுக்கள் சிலவற்றுக்கிடையில் பொருளாதார நடவடிக்கை சம்பந்தமாக அண்மையில் புரிந்துணர்வு உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் ஜூன் மாதமளவில் சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு மேலும் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இலங்கை தனது வௌிநாட்டு இருப்பை 1.5 பில்லியனதாக உயர்த்திக் கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளது.

Related posts: