உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையில் பொருட்களின் விலைகள் குறைவு – கைத்தொழில் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவிப்பு!

உலகில் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள மட்டத்துடன் ஒப்பிடும் போது இலங்கையில் விலைகள் சிறந்த மட்டத்தில் இருப்பதாக கைத்தொழில் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளில் சமையல் எரிவாயு, டீசல் பெட்ரோல் போன்றவற்றின் விலைகள் பெருமளவில் அதிகரிக்கப்பட்டுள்ளன. எனினும் இலங்கையில் குறைந்தளவிலேயே அவற்றின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன.
தற்போதும் ஆசியாவிலேயே இலங்கையிலேயே குறைந்த விலையில் இவை விற்பனை செய்யப்படுகின்றன. மக்கள் கஷ்டத்து உள்ளாகி இருப்பது உண்மை என்றாலும் மக்களுக்கு முடிந்தவர அரசாங்கம் நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் டொலர் தட்டுப்பாடு காரணமாக எரிபொருள், எரிவாயும் மற்றும் அத்தியவசிய பொருட்களின் விலைகள் மாத்திரமல்லது அத்திவசியமற்ற பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன.
விலை அதிகரிப்புக்கு ஏற்ப மக்களின் வருமானம் அதிகரிக்கவில்லை என்பதால், இலங்கை மக்கள் பெரும் பொருளாதார கஷ்டங்களை எதிர்நோக்கி வருவதாக பொருளியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|