உலக தடுப்பூசித் திட்டங்களில் குறிப்பிடத்தக்க ஏற்றத்தாழ்வுகள் இன்னமும் தொடர்கிறது – – தடுப்பூசி ஒத்துழைப்பு சர்வதேச மன்றத்தில் அமைச்சர் தினேஸ் சுட்டிக்காட்டு!

30 வயதுக்கு மேற்பட்ட 90 வீதமான மக்கள் தொகையினருக்கு தடுப்பூசியை செலுத்தியுள்ள இலங்கை அரசாங்கத்தின் வெற்றியை கோவிட்-19 தடுப்பூசி ஒத்துழைப்பு சர்வதேச மன்றத்தில்முன்னிலைப்படுத்திய வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன, கோவிட்-19 தொற்றுநோயை வெற்றிகரமாக தோற்கடிப்பதற்காக உலகெங்கிலும் உள்ள தடுப்பூசித் திட்டங்களில் குறிப்பிடத்தக்க ஏற்றத்தாழ்வுகள் இன்னும் இருப்பதாகவும் சுட்டிக்காட்டயுள்ளார்.
மெய்நிகர் ரீதியாக இடம்பெற்ற கோவிட்-19 தடுப்பூசி ஒத்துழைப்பு குறித்த முதலாவது சர்வதேச மன்றத்தில் உரையாற்றும் போதே இவ்’வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் –
இலங்கையின் தடுப்பூசித் திட்டத்திற்காக 2.7 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் உட்பட 10 மில்லியன் தடுப்பூசிகளை நேரடியாக வழங்கியமைக்காக இருதரப்பு மற்றும் சர்வதேசப் பங்காளிகளுக்கு, குறிப்பாக சீனாவிற்கு வெளிவிவகார அமைச்சர் குணவர்தன நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி உற்பத்தித் தரத்தைப் பராமரிப்பதற்காக ஆராய்ச்சி மற்றும் தயாரிப்பு விரிவாக்கத்தில் நெருக்கமான ஒத்துழைப்பையும் இதன்போது வெளிவிவகார அமைச்சர் வலியுறுத்தினார்.
அத்துடன் பாதுகாப்பான, பயனுள்ள, தரமான மற்றும் மலிவு விலையில் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை அனைவரும் அணுகுவதை உறுதி செய்வதற்கான நிலையான அபிவிருத்தி இலக்கு 3 இக்கு அமைய, அனைவருக்கும் கோவிட்-19 தடுப்பூசிகள் கிடைப்பதற்கும், மலிவு விலையில் வழங்குவதற்காக நாடுகளுக்கு இடையே நெருக்கமான ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கு உலகளாவிய முயற்சிகளை மேம்படுத்த வேண்டும் எனவும் வெளிவிவகார அமைச்சர் அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது
சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யியின் தலைமையில் இடம்பெற்ற இந்த மன்றத்தில், ஐ.நா. செயலாளர் நாயகம், சர்வதேச சுகாதார தாபனத்தின் பணிப்பாளர் நாயகம், 24 நாடுகளின் வெளிநாட்டு அமைச்சர்கள் மற்றும் சுகாதார அமைச்சர்கள் மற்றும் தடுப்பூசி உற்பத்தியாளர்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் தடுப்பூசி ஒத்துழைப்பை முன்னேற்றுவதற்கான கூட்டு அறிக்கையொன்றும் பங்கேற்பாளர்களால் வெளியிடப்பட்டிருந்தமை குகுறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|