உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு உறுப்பினராக நீலிகா மாளவிகே நியமனம்!

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு அறிவியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் விசேட வைத்திய நிபுணர் நீலிகா மலவிகே, கொரோனா தொடர்பான உலக சுகாதார ஸ்தாபனத்தின் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கொரோனா தொழில்நுட்ப அணுகல் தொடர்பான அறிவியல், தொழில்நுட்ப மற்றும் மூலோபாய விடயங்களில் ஆலோசனை வழங்குவதற்கு என உலக சுகாதார ஸ்தாபனம் ஒரு தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவை நிறுவியுள்ளது.
இக் குழுவில் கொரோனா சுகாதார தரப்புக்களில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் என பலதரப்பட்ட புகழ்பெற்ற 10 நிபுணர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
அக் குழுவிலேயேயே பேராசிரியர் விசேட வைத்திய நிபுணர் நீலிகா மலவிகேயும் உள்வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாளை காலை 10 மணிவரை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!
கல்வி வெளியீட்டு திணைக்கள பணிப்பாளரின் இடமாற்றம் இரத்து!
கடந்த ஆறு மாதங்களில் 12 பேர் நீர்வெறுப்பு நோயினால் 12 பேர் உயிரிழப்பு - சுகாதார அமைச்சு தகவல்!
|
|