உலக சாதனையாளர் உள்ளிட்ட வீரர்கள் நாட்டை வந்தடைந்தனர் – விமான நிலையத்தில் மகத்தான வரவேற்பு!

Wednesday, September 8th, 2021

பரா ஒலிம்பிக் போட்டித் தொடரில் பதக்கம் வென்று இலங்கைக்கு பெருமை சேர்த்த வீரர்கள் நேற்று மாலை நாட்டை வந்தடைந்தனர்.

நாட்டிற்கு கௌரவத்தை தேடித்தந்த குறித்த வீரர்களுக்கு மகத்தான வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த போட்டியில் இலங்கை இரண்டு பதக்கங்களை வென்றிருந்தது. அதன்படி ஈட்டி எறிதல் போட்டியில் தினேஷ் பிரியந்த தங்கப் பதக்கம் வென்றதுடன், மற்றுமொரு பிரிவு ஈட்டி எறிதல் போட்டியில் சமித்த துலா கொடிதுவக்கு வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.

இதேவேளை இலங்கை வீரர் தினேஷ் பிரியந்த ஹேரத் F46 ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொண்டு 67.79 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி எறிந்துள்ள நிலையில், இந்த தூரமானது உலக சாதனை புத்தகத்தில் இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: