உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி !

Thursday, November 18th, 2021

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. சர்வதேச ஆற்றல் முகமை மற்றும் OPEC அமைப்பின் எச்சரிக்கையை தொடர்ந்து உலக சந்தையில் எண்ணெய் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளன.

ஐரோப்பிய நாடுகளில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்களை காரணம் காட்டி, அதிகரித்த விநியோகம் தொடர்பில் சர்வதேச ஆற்றல் முகமை மற்றும் ஒபெக் (OPEC) அமைப்பு என்பன எச்சரிக்கை விடுத்திருந்தன.

Brent-இன் விலை 79 சதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதுடன், தற்போது Brent பெரலொன்றின் விலை 81.64 டொலராக காணப்படுகின்றது.

அமெரிக்க மேற்கு டெக்சாஸ் மசகு எண்ணெய் 94 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதுடன், 79.82 டொலராக காணப்படுகின்றது.

அதிகரிக்கும் எண்ணெய் விலையினால் அமெரிக்காவில் எண்ணெய் உற்பத்தி 2022 இல் 60 வீதமாக அதிகரிக்கும் என கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: