உலக சந்தையில் நிலக்கரியின் விலை அதிகரிப்பு – மின்னுற்பத்திக்கான செலவு அதிகரிக்கும் என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் தெரிவிப்பு!

Tuesday, October 12th, 2021

உலக சந்தையில் நிலக்கரியின் விலை வேகமாக அதிகரிப்பதால் மின்னுற்பத்திக்கான செலவு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தற்போது ஒரு மெட்ரிக் டன் நிலக்கரியின் விலை 200 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் 40 சதவீதம் நிலக்கரியை கொண்டு உற்பத்தி செய்யப்படுகின்றது.

இதன்டையே இந்த ஆண்டுக்கு தேவையான நிலக்கரி ஏற்கனவே, இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் எம்.ஆர். ரணதுங்க தெரிவித்துள்ளார்..

எவ்வாறாயினும் சர்வதேச சந்தையில் நிலக்கரியின் விலை அதிகரித்துள்ளமையினால், அடுத்த ஆண்டு மின்சார உற்பத்திக்கான செலவு அதிகரிக்கக்கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனடிப்படையில் ஒரு அலகு மின்சார உற்பத்திக்கான செலவு 4 ரூபாவினால் அதிகரிக்கக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவேளை கொவிட்-19 காரணமாக 45 ஆயிரம் மில்லியன் ரூபாவுக்கான கட்டண பட்டியல்கள் செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ளன.

நுகர்வோர் அவற்றை செலுத்துவதில் மேலும் தாமதமாகுவதாகவும் இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் எம்.ஆர். ரணதுங்க சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


செப்டம்பர் 15 ஆம் திகதிக்கு பின்னர் தடுப்பூசி டிஜிட்டல் சான்றிதழ் வழங்க ஏற்பாடு - சுகாதார அமைச்சர் அ...
ஈரான் இஸ்லாமிய குடியரசுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளும் வெளி விவகார அமைச்சர் அலி சப்ரி!
ஜூலை மாதம் மின் கட்டணம் குறைப்பு சதவீதம் குறித்து அறிவிக்கப்படும் - பொதுப் பயன்பாட்டு ஆணைக் குழு தெர...