உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு அனுசரணை – பயறுச் செய்கையில் ஈடுபடும் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை!

இலங்கையில் பயறு செய்கையினை மேற்கொண்டிருக்கும் 14 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு முன்வந்துள்ளது.
இதற்கமைவாக பயறுச் செய்கையில் ஈடுபடும் ஒரு குடும்பத்திற்கு 18 ஆயிரம் ரூபா நிவாரணம் வழங்குவதற்கு உலக உணவு அமைப்பு விருப்பம் தெரிவித்துள்ளது.
அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதியான விம்லெம்ரா செரன் அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
சிறுபோகத்தில் வேளாண்மைச் செய்கை மேற்கொள்ளாத காணிகளில் பயறுச் செய்கையை மேற்கொள்ள முடியும் என்று அமைச்சர் இதன்போது தெளிவுபடுத்தினார்.
இதேவேளை ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலேயே பயறுச் செய்கை அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது.
சந்தையில் தற்போது ஒரு கிலோ பயறு ஆயிரம் ரூபாவிற்கு மேல் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்தும் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்துள்ள யாழ்.சுன்னாகம் நூலகம்!
யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை மின்தடை
பரசிட்டமோல் மாத்திரைக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் !
|
|