உலக இணையசேவை தரப்படுத்தலில் இலங்கை! 

Wednesday, March 28th, 2018

உலக இணையசேவை வேகத்தரப்படுத்தலில் இலங்கை முன்னேற்றம் அடைந்துள்ளது.

இதன்படி உலக அளவில் கையடக்கப் பேசிகளுக்கான இணைய வேகத்தில் இலங்கை 15 இடங்களில் முன்னேறி 82ஆவது இடத்தில் உள்ளது. கையடக்கபேசியூடான இணைய சேவையின்தரவிறக்க வேகம் நொடிக்கு 16.08 மெகாபைட்டாக காணப்படுகிறது.

நிலையான தொலைபேசி வழி இணைய சேவை வழங்குதலில் இலங்கை ஒரு இடம் முன்னேறி, 76வது இடத்தில் உள்ளது. நிலையான இணைய சேவையின் தரவிறக்க வேகம் நொடிக்கு 19.53மெகாபைட் என்ற அப்படையில் உள்ளது.

இந்த தரப்படுத்தல் பட்டியலில் முதலாம் இடத்தில் நோர்வே மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் உள்ளன.

Related posts: