உலகை வெற்றி கொள்ள இளம் தலைமுறை உருவாக்கப்பட வேண்டும் – ஜனாதிபதி!

Wednesday, March 27th, 2019

எமது கலாசார கட்டமைப்புகள், பழக்க வழக்கங்கள் மற்றும் சம்பிரதாயங்களை ஒருபோதும் எந்தவித சக்திகளுக்கும் அடிபணிய விடக் கூடாது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

எமது கலாசார சம்பிரதாயங்களுக்கு மதிப்பளிக்கும், உலகினை வெற்றிகொள்ளத்தக்க கல்வி கற்ற இளம் தலைமுறையொன்று நாட்டில் உருவாக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தொழில் வாய்ப்பினை பெற்றுக்கொள்ளும் நோக்குடன் மாத்திரம் கல்வியை பெற்றுக்கொள்ளாது, தான் சார்ந்த சமூகத்தினதும் உலகினதும் முன்னேற்றத்திற்காகவே ஒருவர் கல்வியை பெற வேண்டுமென தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், தாய் நாட்டின் கீர்த்தியை உலகெங்கும் பரவச் செய்யக்கூடிய கல்வி கற்ற எதிர்கால தலைமுறையொன்று நாட்டில் உருவாக்கப்பட வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: