உலகை அச்சுறுத்தும் கொரோனா: தென்கொரியாவில் பொதுத் தேர்தல் – வெற்றிபெற்றது லிபரல் கட்சி !

Thursday, April 16th, 2020

கொரோனா வைரஸின் அச்சுறுத்தலுக்கும் மத்தியில் தென்கொரியாவில் நேற்று, புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான பொது தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தள்ளது.

ஏராளமானோர், முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து வாக்களித்தனர். ஒவ்வொரு வரும், வெப்பமானி சோதனைக்கு பிறகே, வாக்கு சாவடிக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

அதன்பின், கை துாய்மைக்கான கிருமி நாசினி, ‘ஜெல்’ அவர்களுக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து, ஒரு முறை பயன்படுத்தும், கையுறை அளிக்கப்பட்டது.

அதை அணிந்து, விருப்பமான வேட்பாளர்களின் சின்னத்திற்கு மக்கள் வாக்களித்தனர். சுயமாக தனிமையில் உள்ளோருக்கு, இதர வாக்காளர்களுக்கான  வாக்கு  போடும் நேரம் முடிந்ததும், வாக்களிக்க வாய்ப்பளிக்கப்பட்டது.

‘இந்த தேர்தலில், ஜனாதிபதி மூன் ஜே இன் தலைமையிலான லிபரல் கட்சி பெரும்பான்மை இடங்களை வெற்றிக்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: