உலகை அச்சுறுத்தும் கொரோனா: ஏப்ரல் இறுதிவரை சமூக இடைவெளித் திட்டம் நீடிப்பு – அமெரிக்க ஜனாதிபதி!

Monday, March 30th, 2020

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் முகமாக எதிர்வரும் ஏப்ரல் இறுதிவரை அமெரிக்காவில் சமூக இடைவெளித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்

வெள்ளை மாளிகையில் நேற்றையதினம் செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், அமெரிக்காவில் கொரோனா வைரஸிக்கு எதிரான hydroxychloroquine மருந்து நியூயோர்கில் 1100 கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

இது தரும் பலனை பொறுத்து நம்பமுடியாத முடிவுகளை பெற்றுக்கொள்ள முடியும் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதனிடையே பிரித்தானியாவில் கொரொன வைரஸிக்கு எதிரான நடவடிக்கையில் இளைப்பாறிய 20 ஆயிரம் மருத்துவத்துறையினர் இணைந்துள்ளனர். அங்கு கடந்த 24 மணித்தியாலங்களில் 209 பேர் மரணமாகியுள்ளனர்.

அத்துடன் ஸ்பெய்னில் 24 மணித்தியாலங்களில் 838 பேர் மரணமாகினர். இதனையடுத்து அங்கு மரணமானோரின் எண்ணிக்கை 6500 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் இத்தாலியில் கடந்த 24 மணித்தியாலங்களில் 754 பேர் மரணமாகினர். இதனையடுத்து அங்கு மரணமானோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 779 ஆக உயர்ந்துள்ளது. பிரான்ஸில் 24 மணித்தியாலங்களில் 292 பேர் பலியாகியுள்ளனர்

இந்தியாவில் இதுவரை 27பேர் உயிரிழந்தனர். தமிழகதத்தில் கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. மலேசியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 7 பேர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் இருவரை இலங்கையில் 117 பேர் இந்த நோயின் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாக மருத்துவ தரப்பு கூறுவதுடன்  அதில் ஒருவர் பலியாகியுள்ளமையுடன் மேலும் 10 பேர் நோய் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.

அந்தவகையில் இதுவரை உலகளாவிய ரீதியில் 33 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவைரஸினால் பலியாகியுள்ளனர். அத்துடன் ஏறத்தாள 7 இலட்சத்து 20ஆயிரம் பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என்று புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.

Related posts: