உலகில் பெண்கள் தலைமைத்துவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன: சுவிஸ் நாட்டின் வெளிவிவகார அமைச்சின் பதில் துணைத்தூதுவர்

உலகில் பெண்கள் தலைமைத்துவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஆனால், இன்றைய காலத்திலும் எமது சுவிஸ் நாட்டிலும் பெண்களின் தலைமைத்துவம் அதிகரித்துக் காணப்படுகின்றன. குறிப்பாக நாங்கள் வடக்கில் பெண் தலைமைத்துவமாகக் கொண்டுள்ள குடும்பங்களின் வாழ்வை மேம்படுத்தும் வகையில் பல்வேறு செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறோம்.
இலங்கைக்கான சுவிஸ் நாட்டின் வெளிவிவகார அமைச்சின் எற்பாட்டில் வடக்கில் பெண்கள் தலைமைத்துவமுடைய குடும்பங்களின் சுயதொழிலுக்கான வேலைவாய்ப்பினை மேம்படுத்தும் வகையிலான புதிய செயற்திட்ட அங்குராப்பண நிகழ்வு நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை(10-6-2016) யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றது.
சுவிஸ் நாட்டின் வெளிவிவகார அமைச்சின் பதில் துணைத்தூதுவர் எஸ்தார் மௌரர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையில்,
தற்போது நாட்டில் மக்களின் அடிப்படைத் தேவைகளின் முக்கிய பணிகளை இலங்கை அரசாங்கம் செயற்படுத்தி வருகின்றது. இன்றைய காலத்தில் பல்வேறு கட்டமைப்புக்களை முக்கியப்படுத்தி பெண்கள் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களின் பணிகள் சுவிஸ் மற்றும் இலங்கை அரசாங்கத்துடன் சேர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு முன்னெடுக்கப்படும் செயற்றிட்டம் பாரியதொரு மாற்றத்தினைப் பெண் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களுக்கு எற்படுத்தும்.
நாட்டில் பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்டுள்ள பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே எமது அரசாங்கத்தின் பணிகளின் முக்கிய நோக்கமாகவுள்ளது. இலங்கை தற்போது பலம் பொருந்திய நாடாக மாறி வருவதை நாம் வரவேற்கின்றோம் என்றார்.
Related posts:
|
|