உலகில் சிறந்த விமான சேவையில் இலங்கைக்கு பின்னடைவு!

Monday, June 26th, 2017

உலகில் சிறந்த 100 விமான சேவைகளை மதிப்பீடு செய்யும் நடவடிக்கையினை சர்வதேச ஸ்கை ட்ரெக்ஸ் நிறுவனம் ஒவ்வொரு வருடமும் மேற்கொண்டு வருகிறது.

இவ்வாறு தெரிவு செய்யப்படும் விமான சேவைகள் நிறுவனத்திற்கு விருது வழங்கி கௌரவிக்கப்படும்.அதற்கமைய 2017ம் ஆண்டுக்கான TOP 100 AIRLINES பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.அந்தப் பட்டியலின்படி கட்டார் விமான சேவை முதலாம் இடத்தைப் பிடித்துள்ளது.

அதேவேளை இலங்கையின் சிறிலங்கன் விமான சேவை 87வது இடத்தைப் பிடித்து பாரிய பின்னடைவை சந்தித்துள்ளது.இதுவரை கணிக்கப்பட்ட பட்டியல்களின்படி இலங்கை இந்த வருடமே பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது.

இலங்கையின் விமான சேவை நிறுவனமான சிறிலங்கன் எயார்லைன்ஸ் 2012ம் ஆண்டு பட்டியலில் 70ம் இடத்தையும், 2013ல் 69வது இடத்தையும், 2014, 2015ல் 73வது இடத்தையும், 2016ல் 67வது இடத்தையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும் இந்த வருடமே பாரிய பின்னடைவை சந்தித்துள்ளது.

இதேவேளை இவ்வருடம் முதலாம் இடத்தை தக்கவைத்துக்கொண்ட கட்டார் விமான சேவைகள் நிறுவனம் கடந்த ஆறு வருடங்களில் மூன்று தடவைகள் முதலாம் இடத்தையும் மூன்று தடவைகள் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Related posts: