உலகில் அதிகளவு தேங்காய்களை வீண்விரயம் செய்யும் நாடாக இலங்கை – விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டு!

உலகில் அதிகளவு தேங்காய்களை வீண்விரயம் செய்யும் நாடாக இலங்கை மாறியுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
தெங்கு உற்பத்தி சபையின் 52 வருடங்கள் நிறைவை முன்னிட்டு மெதமூலன தெங்கு பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றுகையிலே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
குறித்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர்:
தேங்காயை பயன்படுத்துகையில் ஏற்படும். விரயங்களை குறைக்க புதிய தொழினுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது. இத்திட்டம் நடைமுறைக்கு வர முன்னர், இது குறித்து மக்களுக்கு தெளிவூட்டப்படும்.
சீனி, உப்பு, மா, கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகளை அதிகம் உண்பதிலும் நாடு முன்னேறியுள்ளது.
இதேநேரம் தேங்காய் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்களின் ஏற்றுமதி வருமானம் 25.17 வீதத்தால் அதிகரித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் 2024 பெப்ரவரி அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால்,தென்னைசார் உற்பத்திகளை அதிகரிப்பதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|