உலகிலேயே அதிகளவான சிறுவர் மணப்பெண்கள் தெற்காசியாவில் – யுனிசெஃப் தகவல்!
Friday, April 21st, 2023உலகளாவிய ரீதியாக தெற்காசியாவிலே அதிக சிறுவர் திருமணங்கள் பதிவாகியுள்ளதாக யுனிசெஃப் வெளியிட்ட புதிய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
கொவிட்-19 பரவல் காரணமாக அதிகரித்த நிதி நெருக்கடிகள் மற்றும் பாடசாலை மூடல்களால் இளம் வயது பெண் பிள்ளைகளை திருமணம் செய்ய பெற்றோர்களால் நிர்ப்பத்திக்கபட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்காசியாவில் 290 மில்லியன் சிறார்கள் மணமகள்களாக உள்ளதாக புதிய கணக்கெடுப்பில் குறிப்பிடப்படுகின்றது.
அது உலக சனத்தொகையில் 45 வீதம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. உலகிலேயே அதிக சிறுவர் திருமணம் தெற்காசியாவில் உள்ளமை கவலைக்குரியது’ என்று யுனிசெஃப்பின் தெற்காசியாவிற்கான பிராந்திய பணிப்பாளர் நோலா ஸ்கின்னர் தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கான சட்டப்பூர்வ திருமண வயது நேபாளத்தில் 20 ஆகவும், இந்தியா, இலங்கை மற்றும் பங்களாதேஷில் 18 ஆகவும் உள்ளது.
அதேநேரம், ஆப்கானிஸ்தானில் சட்டபூர்வமான திருமண வயது 16 ஆகவும் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் ஆகக்குறைந்த திருமண வயது 18 ஆகவும் உள்ளது.
திருமண செலவுகளை குறைப்பதற்காக, கொவிட் தொற்று பரவல் காலப்பகுதியில் பெற்றோர் தமது பெண் பிள்ளைகளுக்கு இளம் வயதில் திருமணம் செய்து வைத்துள்ளதாக யுனிசெஃப் வெளியிட்ட புதிய ஆய்வில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|