உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல் இலங்கையில்!
Tuesday, October 5th, 2021உலகின் மிகப்பெரி ய கொள்கலன் கப்பலாகக் கருதப்படும் எவர் ஏஸ் (Ever Ace) கப்பல் இன்று (05) கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது.
இந்தக் கப்பல் 400 மீற்றர் நீளமும், 62 மீற்றர் அகலமும் கொண்டதுடன், 23 ஆயிரத்து 992 கொள்கலன்களைக் கொண்டுசெல்லும் திறன்கொண்டது.
எவர் கிரீன் (Evergreen) கப்பல் நிறுவனத்திற்குச் சொந்தமான இந்தக் கப்பல், கடந்த ஜூலை மாதம் கொள்கலன் கையாள்கைக்கு இணைக்கப்பட்டது.
நெதர்லாந்தின் ரோடர்டேம் துறைமுகத்திலிருந்து, கடந்த மாதம் புறப்பட்ட குறித்த கப்பல், இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது.
இது போன்ற பாரிய கொள்கலன் கப்பல்களைக் கையாளக்கூடிய 24 துறைமுகங்கள் உலகில் உள்ளன. எனினும், தெற்காசியாவில் அந்தக் கப்பல் நங்கூரமிடக்கூடிய ஒரேயொரு துறைமுகம் கொழும்பு துறைமுகம் என்பது குறிப்பிடத்தக்கது
Related posts:
2018 வரவு செலவுத்திட்டம் ஆரோக்கியமானது!
கையடக்க தொலைபேசி பாவனையாளர்களுக்கு அறிமுகமாகும் புதிய வசதி - தொலைத் தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்க...
15 வயது சிறுமி கொடூரமாக கொலை - முச்சக்கர வண்டி சாரதி !
|
|