உலகின் சிறந்த 2 வீத விஞ்ஞானிகளுள் இலங்கையர்கள்!

Thursday, October 28th, 2021

எமது நாட்டின் நிபுணர்கள் அங்கம் வகிக்கும் தேசிய தாவர தடுப்பு காப்பு சேவை சீனாவின் உர கொடுக்கல் வாங்கல் மூலம் சவாலுக்கு உட்படுத்தப்படுகின்ற நிலையில், உலகின் முன்னணி பல்கலைக்கழகமொன்று விடுத்த புதிய அறிக்கையொன்றில் எமது நாட்டு நிபுணர்களின் சிறப்பு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஸ்டென்ஃபோர்ட் பல்கலைக்கழகம் விடுத்த இந்த அறிக்கைக்கு அமைய, உலகின் முக்கியமான ஆய்வுகளை மேற்கொள்ளும் 2 வீத விஞ்ஞானிகளில் இலங்கையைச் சேர்ந்த 24 பேர் அடங்குகின்றனர்.

இவர்களில் ஜயவர்தனபுர பல்கலைக்கழக பேராசிரியர் நீலிகா மலவிகே, பேராசிரியர் மெத்திகா வித்தானகே, கலாநிதி அனுஷ்கா யூ ராஜபக்ஸ ஆகியோரும் அங்கம் வகிக்கின்றனர்.

இதனைத் தவிர சர்வதேச நீர் முகாமைத்துவ நிறுவனம், யாழ்ப்பாணம், பேராதனை, கொழும்பு, களனி, வயம்ப பல்கலைக்கழகங்களின் விஞ்ஞானிகளின் பெயர்களும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

Related posts: