உலகின் கடல்சார் பயிற்சியில் இலங்கை!

Thursday, May 31st, 2018

அமெரிக்காவின் ஹவாய் தீவுகளில் ஜுன் மாதம் 27ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 2ஆம் திகதிவரை நடைபெறவுள்ள ‘ரிம்பெக்’ RIMPAC எனப்படும் உலகின் மிகப்பெரிய கடல்சார் பயிற்சியில் இலங்கை முதல்முறையாக பங்கேற்கவுள்ளது.

அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பெண்டகன் இது தொடர்பான அறிவித்தலை கடந்த வாரம் வெளியிட்டுள்ளது.

இதில் 26 நாடுகளும், 47 மேற்பரப்பு கப்பல்களும், 5 நீர்மூழ்கி கப்பல்களும், 18 தேசிய தரைப்படைகள், 200 இற்கும் அதிகமான விமானங்களுடன் 25000 பேர் இதில் பங்கேற்க உள்ளனர்.

இந்த பயிற்சியில் இலங்கை, வியட்நாம், பிரேசில் மற்றும் இஸ்ரேல் முதலான நாடுகள் முதல் முறையாக பங்கேற்க உள்ளன. இந்த கடல்சார் பயிற்சியில் சீனா பங்கேற்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் சீன கடற்பிராந்தியம் தொடர்பில் அமெரிக்காவுடன் ஏற்பட்டுள்ள முரண்பாட்டு நிலைமையே இதற்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, பிரிட்டன், அவுஸ்திரேலியா, கனடா, ப்ரூனி, சிலி, கொலம்பியா, ப்ரான்ஸ், ஜேர்மனி, இந்தியா, இந்தோனேசியா, ஜப்பான், மலேசியா, மெக்ஸிகோ, நெதர்லாந்து, நியூசிலாந்து, பெரு, தென்கொரியா, ப்லிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் டொன்கா முதலான நாடுகளும் இதில் பங்கேற்கின்றன

Related posts:


பிரதேசங்களினது அபிவிருத்திக்காக உழைக்க இளைஞர்கள் அணிதிரள வேண்டும் - ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட நிர்வ...
மே மாதம் நடுப் பகுதிக்குள் நாடு வழமைக்கு திரும்பினால் மட்டுமே ஜூன் 20 இல் தேர்தல் – தேர்தல் ஆணைக்குள...
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான முழுப் பொறுப்பையும் கடந்த அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் – ஜனாதிபதி...