உலகளாவிய முதலீட்டாளர்களின் இலங்கை மீதான நம்பிக்கையை கட்டியெழுப்புவதே எமது நோக்கம் – பிரதமர் மஹிந்த தெரிவிப்பு!

Thursday, April 29th, 2021

நாட்டில் கடந்த சில நாள்களாக கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை வழமைக்கு மாறாக அதிகரித்த போதிலும், நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமூகத்துக்கு ஏற்படும் பாதிப்பை கருத்திற்கொண்டு எந்த சந்தர்ப்பத்திலும் நாட்டை முழுமையாக முடக்காதிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு இருநாள் விஜயம் மேற்கொண்டு வருகைதந்திருந்த சீன பாதுகாப்பு அமைச்சருடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்திருந்த பிரதமர் –

வறுமையை ஒழிப்பதில் சீனா செய்த சாதனைகள் குறித்தும் பாராட்டுத் தெரிவித்திருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச, சீன அரசாங்கம் சுமார் 100 மில்லியன் கிராமப்புற மக்களை வறுமையிலிருந்து மீட்டுள்ளதாகவும் மறுபுறம், வறுமையை ஒழிக்கும் அமெரிக்காவின் உலகளாவிய நிலையான அபிவிருத்தி இலக்குகளை 10 ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவினால் அடைய முடிந்தது. இது ஒரு பெரிய சாதனையாகும். என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் தற்போது அச்சுறுத்தும் கொரோனா தொற்று நோயைத் தடுப்பதற்கான ஒரே வழி தடுப்பூசி மட்டுமே என்பது தற்போது உலகளாவிய ரீதியில் தெளிவாகியுள்ளது எனவும் தெரிவித்திருந்த பிரதமர், கொவிட் தொற்று நோய் பரவல் ஆரம்பித்ததிலிருந்து, சகல இலங்கையர்களுக்காகவும் சீனா 600 ஆயிரம் சினோஃபார்ம் தடுப்பூசிகள் மற்றும் சுகாதார பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவற்றை நன்கொடையாக வழங்கியிருந்தமைக்கும் நன்றி தெரிவித்திருந்ததுடன் இந்த தொற்றுநோயைக் கையாள்வதில் சீன அரசாங்கத்தின் தொடர்ச்சியான ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

அதேநேரம் கடந்த சில வாரங்களில் கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும், நாட்டின் பொருளாதார மற்றும் சமூக தாக்கத்தை கருத்திற்கொண்டு முழு நாட்டையும் முடக்காதிருப்பதற்கு ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் நாங்கள் தீர்மானித்துள்ளோம். தொற்றுநோய்க்கு பிந்தைய நிலைமைக்கு முகங்கொடுப்பதற்கு இன்னும் பலவற்றைச் செய்ய வேண்டும் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன். அத்துடன் உலகளாவிய ரீதியிலிருந்து இலங்கைக்கு முதலீடுகளை ஈர்ப்பதே தற்போதைய எமது முன்னுரிமையாகவுள்ளது. அவ்வாறான முதலீட்டாளர்களின் இலங்கை மீதான நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கு உங்களவு ஆதரவை நான் எதிர்பார்க்கின்றேன் என தெரிவித்திருந்த பிரதமர் மகிந்த ராஜபக்ச தொற்று நோயால் ஏற்படும் சவால்களை சமாளிப்பதற்கு தற்போதுள்ள ஒத்துழைப்பை மேம்படுத்திக் கொள்வதற்கும் சீனப் பாகாப்பு அமைச்சுடனும் சீன அரசாங்கத்துடனும் நெருக்கமாக தொடர்ந்து பணியாற் எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: